Monday, October 19, 2009

டிராகன் - சீனாவைப் பற்றி ஆயிரக் கணக்கில் புத்தகங்கள் சில ஆண்டுகளாக வந்தவண்ணம் உள்ளது. திரு. செந்தில்நாதனின் "டிராகன்" சீனாவைப் பற்றிய பல செய்திகளை எல்லா தரப்பினருக்கும் எளிமையாக கொண்டுச் சேர்க்கும். தமிழில் இந்த மாதிரியான நூல்கள் பல வரவேண்டும். தமிழ் இளைஞர்களை மேலும் தமிழ் மொழியில் எழுதிய நூல்களை படிக்கதூண்ட வேண்டுமென்றால் இது அவசியம். ஆங்கில நூல்கள் மட்டுமே நிகழ்கால பொருளாதார நடப்புகளை வரலாற்று காரணங்களோடு அலசி ஆராய்கிறது என்ற கருத்துகளை மாற்றவேண்டும். மற்றும் என்னை போல், தற்போது வேலைநிமித்தம் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தினாலும், தமிழ் மொழி பள்ளி கல்வி கற்ற பலர் இதனை விரும்புவர்.

சீன வரலாறும் நிகழ்கால நடப்புகளும் இரும்புதிரைக்கு வெளியே தெரிவது கொஞ்சமே. செந்தில் தீவிரமாய் பல நூல்களை படித்து ஒரு நல்ல கதை கூறுவதுபோல் இந்தநூலை படைத்திருப்பது சிறப்பு. வலைத்தளம் மட்டுமே மூலம் என்றில்லாமல், தன் மொழி ஆர்வத்தால் சீன மொழியை கற்று பின்னர் கருத்துகளை நம் ஊர் உவமை கொண்டு எழுதியது பாராட்ட தக்கது. முன்னுரையிலேயே பழம் கதைகள் 'போர்' அடிக்கலாம் என எச்சரித்திருக்கிறார். ஆனால் ஒரு நாவல் போல கொண்டு செல்கிறார். சில சீரியஸ் படிப்பாளிகளுக்கு இது பிடிக்காமல் போகலாம். 5 ஆயிரம் ஆண்டு வரலாறு, அதில் கடந்த ஐம்பது ஆண்டு சீனா ராக்கெட் வேகத்தில் வளர்ச்சிகண்ட விதம் எல்லாமே ஒரு முழுமையாய் பார்த்தால் எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் தெரிகிறது.

சீனாவா? இந்தியாவா? என்ற விவாதம் ஒரு நடுநிலையான பார்வையில் முயன்று இருப்பது தெரிகிறது. ஆனாலும் நம்நாட்டை விட்டுகொடுக்க முடியாமல் நம் பலங்களை மிகைப்படுத்தியுள்ளார். வழக்கமாக இதை நம் மேற்கத்திய எழுத்தாளர்களிடமே காணலாம். அவர்களில் சிலர் சீனாவையும் சிலர் இந்தியாவையும் தூக்கியும் தாக்கியும் எழுதிவுள்ளார்கள். ஆசிரியர் எடுத்துக்கொண்ட தலைப்பின் வீச்சும் ஆழமும் மிகவும் பெரியது. இருப்பினும் கூடியவரை வெற்றி கண்டுள்ளார். செந்தில் மேலும் பார்த்த பார்வை சற்று வலது என தோன்றுகிறது. ஒருவேளை இது தேவைதானோ அல்லது இது காலத்தின் கட்டாயமோ ? ஆசிரியர் எழுப்பியுள்ள சில கேள்விகள் சரியானவை. நமது இடதுசாரியினர் தற்போது சுட்டிகாட்ட கீயுபாவை தேடுகிறார்கள். சீனத் தலைவர்கள் போல் ஏன் இவர்களும் வறட்டு கொள்கைகளை மக்களின் எண்ணங்களை கண்டு புத்திசாலி தனமாக நடைமுறைகேற்ப மாற்றவில்லை என்று எண்ணதுண்டுகிறார்.

பண்டைய சீன வரலாறு பற்றி விளக்கும் போது, இதெல்லாம் தேவையா என்ற கேள்வி மனதில் எழுகிறது. வாசகரின் மனகண்ணில் சடை வைத்த ஹாங்காங் குங்பூ திரைப்படங்கள் வருகின்றன. இந்த படங்களின் தாக்கம் ஆசிரியரை நகைசுவையுடன் எழுத துண்டி உள்ளது. இந்த பகுதிகள் சற்று விறுவிறுப்பை குறைத்தாலும் இந்த பாணி டெம்போவை கொடுக்கிறது.

நம்மை போல் சீனாவும் ஒரு தொன்மையான கலாச்சாரம் மற்றும் அவர்களுக்கு பின்னாலும் ஒரு மிகபெரிய வரலாறு உண்டு என்று பார்க்கும்பொழுது, சீனாவின் இந்நாளைய முன்னேற்றம் புரிகிறது. நம் மனம் ஏன் நம்மால் இது போன்ற குறுகிய கால மாற்றங்களை கொணர முடியவில்லை என்ற எண்ணம் எழுகிறது. ஆயினும் ஆசியரின் குறை பட்டியலை பார்கையில், ஒருவேளை ஆமை போல் நாமும் பின்னல் சென்று சீனாவை பிடிப்போமா ? என்ற கேள்வி மனதில் வருகிறது. பொருளாதாரத்தை வரலாற்று நோக்குடன் சம காலத்தில் செய்திகளில் படித்ததை ஒரு கதை ப்போல் தொடர்ச்சியாக படிக்கும் போது ஒரு 'பிளாஷ் பேக்" உணர்வு வரும். டிராகன் இந்த வகையில் அதிக மதிபெண்களுடன் தேர்கிறது.

சீனாவின் வரலாற்றை படிக்கும்போது , செந்தில் ஒரு இந்தியராக , உள்ளம் கொதித்து , பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஒரு பாதிக்கப்பட்டவரை போல எழுதியுள்ளார். இத்துணை புள்ளிவிவரங்கள் மற்றும் வாயில் வராத சீனப்பெயர்களை படிக்கும் போது சற்று தலைசுற்றுகிறது. எனினும், ஆராய்ச்சி செய்யும் தமிழ்வழி கல்விபெறும் மாணவர்களுக்கு ஒரு நல்ல நூலாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

"விண்ணகத்தில்", " விண்ணகத்தில்" என்ற வார்த்தையை முதல் சில இடங்களில் படிக்கும்போது ஒரு வித்தியாசமாக இருந்தது, பின்னர் காரணம் அறிந்தபின் செந்திலின் அணுகுமுறை புரிகிறது. கன்பியுசியஸ் தத்துவங்களும், அதற்கும் நம் பண்டைய நம்பிக்கை / சிந்தனைக்கும் உள்ள ஒற்றுமை விளக்கம், மற்றும் அதன் நிகழ்கால தாக்கங்களும் புரியாத சீன இந்நாள் நடப்புகளை படம் பிடித்து காட்டுகிறது. இப்படி இருந்த இவர்கள் இப்படி ஆனா கதை பெரும்பாலான தமிழ் வாசகருக்கு புதிது. பொதுவாக மேற்கத்திய வரலாறு அறிய இருந்த வாய்ப்புக்கள் சீன சரிதையை தமிழில் படிக்க குறைவே. சோவியத் ரசிய வரலாறு எழுபதுகளில் இருந்த இணக்கத்தினால் அரைகுறையாக கற்றோம். சீனா என்றுமே ஒரு புதிர்தான். அந்த புதிரைச் சற்று புரியவைக்கிறார் செந்தில். மேலும் தாவிசம் அதன் தோற்றம் பற்றி எளிமையை விளங்க வைக்க அவர் செய்த முயற்சி வீண் போகவில்லை. பௌத்தமதம் பின்னாளில் சீனாவை எப்படி ஆட்கொண்டு இடையில் வீழ்ந்து மீண்டும் எழுந்தது என்றும் அறிகிறோம்.

Confucious, Taoism மற்றும் பௌத்தமதமும் எப்படி படிப்படியாக தோன்றி பின்னர் ஒருகலவையாய் சீன கலாச்சாரத்தை ஏற்படுத்தியது என்பதை வரலாற்று பின்னணியுடன் விவரித்துள்ளார். சீனாவும் இந்தியாவும் பல பார்வை கோணங்களில் ஒன்றுபட்டும் தெரிகிறது. உதரணமாக, நான்கு வர்ணங்கள் பற்றி ஒப்பிடும் இடங்களில் இதை காண்கின்றோம். ஆசிய நாடுகள் எல்லாம் ஒரே மாதிரி தோன்றுவது வியப்பில்லை. பெண் பாதக் கட்டுபோடுதல் போன்ற வழக்கங்கள் கம்யூனிஸ்ட் காலம் வரை தொடர்திருகிறது.

மண்டரின் என்பது நம் மந்திரியில் இருந்து தோன்றியது என்று அறியும்போது வியப்பாக உள்ளது. மொழி வழக்கு (dialects) பல, ஒலியிலும் வேறுபட்டுருந்தும், வரி வடிவம் ஒரே பொருள் கூறுகிறது, நம் வேற்றுமையில் ஒற்றுமை கோட்பாடு போல் உள்ளது. சீனர் தகுதி அடிப்படையில் அரசு வேலைகளுக்கு பண்டை நாளில் தேர்வு வைத்து எடுத்தார்கள் என்பது அவர்களின் சமச்சீர் கொள்கைகளை பிரதிபலித்தாலும், சமுதாயத்தில் வேறு வகை பிரிவு இல்லாமல் இருந்ததே காரணம் என மறைமுகமாக கூறியுள்ளார். வரைபடங்கள் (maps) எதுவும் இல்லாமமல் இருப்பது ஒரு குறையே. என்னெனில், இந்த நூலில், வரலாறு, புவியியல் மற்றும் இருப்பிடங்கள் குறித்து விளக்கங்கள் உள்ளது. மனம் படிக்கையில் ஒரு reference-ஐ தேடுகிறது.


பல்வேறு மாற்றங்களுக்குபின் சீனா படிபடியாக ஒரு புரட்சி கம்யூனிஸநாடக மாறிய வரலாறு நன்கு கையாளப்பட்டு இருக்கிறது. 1920- களிலிருந்தே மேற்குலகு ஆசிய நாடுகளை படிப்படியாக